Police Department News

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு பொம்மையாபுரம் பகுதியிலுள்ள ஒட்டப்பிடாரம், சிலோன் காலனியை சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகன் வயது 51/2021, என்பவரை கடந்த 2 ம் தேதி அதிகாலை தெற்கு பொம்மையாபுரம் பகுதியிலுள்ள அவரது தந்தை வீட்டில் வைத்து அரிவாளால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்

இது குறித்து தகவலறிந்த பசுவந்தனை காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகன் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் அவர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான தெற்கு பொம்மையாபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கு முனியசாமி வயது 53/2021, செல்லத்துரை வயது 52/2021, மற்றும் மேற்படி கொலையுண்ட முருகன் வயது 51/2021, ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.இதில் முனியசாமியை தவிர மற்ற 2 மகன்களின் பேரில் ஆறுமுகம் தனது சொத்துக்களை எழுதி வைத்துள்ளார். இதனால் மேற்படி கொலையுண்ட முருகனுக்கும் அவரது அண்ணன் முனியசாமிக்கும் இடையை சொத்து சம்பந்தமாக பிரச்சனை ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் முருகன் தன் தந்தையை பார்பதற்காக தெற்கு பொம்மையாபுரத்திற்கு வந்து அங்கேயே தங்கியுள்ளார் இதனையடுத்து கடந்த 2 ம் தேதி அதிகாலை உறங்கி கொண்டிருந்த முருகனை அவரது அண்ணனான முனியசாமி அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளார்.பின் பசுவந்தனை காவல் நிலையம் சென்று தனது தம்பியை கொலை செய்து விட்டதாக முனியசாமி ஆஜராகி கூறியதன் பேரில் பசுவந்தனை காவல் நிலைய போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து கொலை செய்ய பயன்படுத்திய அரிவாளையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.