Police Department News

அரசு அறிவித்துள்ள நேரடி தேர்வை எதிர்த்து மாணவர்களை போராட தூண்டுபவர்களை கைது செய்ய காவல்துறையினர் முடிவு

அரசு அறிவித்துள்ள நேரடி தேர்வை எதிர்த்து மாணவர்களை போராட தூண்டுபவர்களை கைது செய்ய காவல்துறையினர் முடிவு

கல்லூரிகளில் நேரடி தேர்வுகள் மட்டுமே நடக்கும் என்று அரசு அறிவித்துள்ளது இந்த நிலையில் ஆன் லைனில் தேர்வு நடத்த கோரி மாணவர்களை போராட தூண்டும் சிலர் மீது சட்ட நடவடிக்கையெடுக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்

கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரி வகுப்புகள் ஆன் லைனில் நடந்து வந்தது, மேலும் சில தேர்வுகள் ஆன் லைனில் நடத்தப்பட்டன, ஊரடங்கு தளர்வால் தற்போது நேரடி தேர்வு நடக்கிறது. இதற்கு எதிர்பு தெரிவித்து சில கல்லூரி மாணவர்கள் இரு நாட்களாக தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இந்த நிலையில் நேரடு தேர்வுதான் நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனை ஏற்காமல் தொடர்ந்து மாணவர்களை போராடத்தூண்டும் வகையில் சில அமைப்பினர் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைதகதுள்ளது. அவர்களின் பின்னனி குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் கூறுவதாவது. உயர் கல்வித்துறையின் விளகககத்தை ஏற்று மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும், மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் போராட்டத்தே தூண்டும் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்கள் கைது செய்யபகபடுவார்கள் என்றனர.

Leave a Reply

Your email address will not be published.