அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.
பாலமேடு ஜல்லிக்கட்டு வரும் ஜனவரி மாதம் 15ஆம் தேதி அன்றும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 16ஆம் தேதியன்றும் நடைபெற உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டின் போது மதுரை மாவட்டத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இந்த வருடம் ஜல்லிக்கட்டு போட்டியின்போது ஏற்படுத்த வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வீ.பாஸ்கரன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள் உடன் சமயநல்லூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு பால சுந்தரம் மற்றும் அலங்காநல்லூர் காவல் ஆய்வாளர் ஆகியோர் இருந்தனர். மேற்படி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் இடத்தினை பார்வையிட்டு அங்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், விழா நடைபெறும் முறை குறித்தும் காவல் கண்காணிப்பாளர் திரு வீ.பாஸ்கரன் அவர்கள் விரிவாக விவாதித்தார்கள்.
ஒவ்வொரு வருடத்தைப் போலவே இந்த வருடமும் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளை சிறந்தமுறையில் நடத்திட காவல்துறை சார்பில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என காவல் கண்காணிப்பாளர் திரு வீ.பாஸ்கரன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.