நீதி மன்றங்களுக்கு தேவை சட்டம்தான் ஆங்கிலம் அல்ல! தமிழ் நாடு மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சில் சேர்மன் பி.எஸ்.அமல்ராஜ்
சமீபத்தில் உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் அவர்கள் நன்கு ஆங்கிலம் பேசத்தெரிந்திருப்பது முக்கியமல்ல சட்டம் தெரிந்திருக்க வேண்டும் அதுதான் முக்கியம் என்றார்.
எழும்பூர் நீதி மன்றத்தில் அமல்ராஜ் அவர்கள் ஜுனியர் வக்கீலாக இருக்கும் போது அவருடைய சீனியர் திருஞான பூபதி அவர்கள் கிரிமினல் வழக்குகளில் நிபுணத்துவம் பெற்றவர் CRPC IPC பிரிவுகளை விரல் நுனியில் வைத்திருப்பார்கள் அவர் ஒரு முறை உயர் நீதி மன்றத்திற்கு வாதாட வந்த போது நீதிபதி அவர் பேசிய ஆங்கிலத்தில் தவறு கண்டுபிடித்து அதை அவரிடம் கூறினார் உடனே வழக்கறிஞர் திருஞான பூபதி You are not my English teacher I am not your student you please don’t care. About my english grammer mistake Kindly suggest me only if you find mistake of law என்றார் சீனியர் வழக்கறிஞர் திருஞான பூபதியிடம் அசாத்திய திறமையிருந்ததால் எப்போதும் வழக்கறிஞர் என்ற கெத்தோடுதான் வலம் வருவார் நீதிபதிகள் ஒருவருக்கு மரண தண்டனை கூட விதிக்க முடியும் ஆனால் வழக்கறிஞர்கள் அந்த தீர்பையே உடைத்து அவரை காப்பாற்ற முடியும் எனவே வழக்கறிஞர்களை பொருத்த மட்டில் அவர்களுக்கு சட்ட அறிவு பிரதானமே தவிர மொழியறிவு ஒரு பிரச்சனை அல்ல இவ்வாறு துக்ளக் பத்திரிக்கைக்கு அவர் பேட்டி அளித்துள்ளார்