Police Department News

மதுரை மாவட்டத்தில் சூதாட்டம் போன்ற சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு பாஸ்கரன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

மதுரை மாவட்டத்தில் சூதாட்டம் போன்ற சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு பாஸ்கரன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

மதுரை மாவட்டத்தில் பணியாற்றும் அனைத்து காவல் நிலைய அதிகாரிகளுக்கு தங்கள் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் எவ்வகையிலும் சூதாட்டம் போன்ற நிகழ்வுகளை அனுமதிக்கக்கூடாது என்று காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரை வழங்கி உள்ளார்கள்.

அதன் அடிப்படையில் சூதாட்டம் போன்ற சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடங்களில் உரிய கண்காணிப்பு செய்து அதனை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில்அலங்காநல்லூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. இளங்கோவன் அவர்கள் போலீசாருடன், ஆரியூர் கண்மாய் அருகே ரோந்து சென்றபோது, அங்கே சட்டத்திற்கு புறம்பாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 4 நபர்களை கைது செய்தனர்.

மேற்படி கைது செய்த நபர்களிடமிருந்து சீட்டு விளையாட பயன்படுத்திய சீட்டுக்கள்- 52, பணம் ரூ. 14,010 பறிமுதல் செய்து, மேற்படி நபர்கள் மீது அலங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுத்தனர்.

எனவே சூதாட்டம் ஒரு கொடிய சமூக பிரச்சனை என்பதை உணர்ந்து சூதாட்டத்தில் பல குடும்பங்கள் தங்கள் ஒளிமயமான வாழ்வாதாரத்தை இழந்து தவிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published.