மேலூர் அருகே நாயத்தான்பட்டி தனியார் பெட்ரோல் பங்கில் கள்ள நோட்டு கொடுத்து பெட்ரோல் போட்ட ஒருவர் கைது கார் பறிமுதல் கீழவளவு போலீசார் நடவடிக்கை
நேற்று இரவு நாயத்தான்பட்டி தனியார் பெட்ரோல் பங்கில் மணப்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சரவணன் என்பவர் அவரது காருக்கு Rs-600/- பெட்ரோல் போட்டுள்ளார் அதில் Rs-500/- கள்ளநோட்டை பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் வெங்கடேசன் என்பவரிடம் கொடுத்துள்ளார் அவர் கொடுத்த ரூபாயில் சந்தேகம் ஏற்படவும் மேற்படி வெங்கடேசன் சரவணனை பிடித்து கொண்டு கீழவளவு போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் மேலூர் வட்ட காவல் ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்கள் கீழவளவு திரு. பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சரவணனை பிடித்தும் காரை பறிமுதல் செய்தும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.