தலைமறைவாக இருந்த குற்றவாளி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானாவில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
சென்னை செனாய் நகரில் இயங்கி வரும் விப்ராஸ் ஆர்ட்ஸ் என்ற விளம்பர கம்பெனியின் மூலம் பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த எதிரிகள்
ரூ .75 ,19, 039/ க்கு விளம்பரம் செய்து கொண்டு பணத்தை தராமல் வாதியை நம்ப வைத்து ஏமாற்றி மோசடி செய்த வழக்கில் 7 வருடம் தலைமறைவாக இருந்த குற்றவாளியை பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வைத்து கைது
திருமதி .கஜலட்சுமி என்பவர் சென்னை. செனாய் நகரில் விப்ராஸ் ஆர்ட்ஸ் என்ற பெயரில் தினசரி நாளிதழ் வாராந்திர புத்தகம் மற்றும் FM Radio ஆகியவற்றில் விளம்பரம் செய்யும் தொழில் செய்து வருவதாகவும், எதிரிகள் 1. கோபால் ஐயர் 2. சிவாஜி பட்கர் 3. சஞ்சய் குமார் சர்மா @ சர்மா, ஆகியோர்கள் SCO 22, 23, First floor K10 Tower, Feroze Gandhi Market, Ludhiana, Punjab என்ற இடத்தில் M/ S K.K.PR& Advertisers என்ற விளம்பரம் செய்யும் தொழில் செய்து வருவதாகவும், மேற்படி எதிரிகளுக்கு தமிழகத்தில் தேவையான விளம்பரங்களை செய்து கொடுக்கும்படி 01.11.2014 ஆம் தேதி கோபால் ஐயர் என்பவர் மூலமாக அறிமுகமாகிய 1) சஞ்சய் குமார் சர்மா @ சர்மா 2. சிவாஜி பட்கர் ஆகியோர்கள் நேரில் வந்து புகார்தாரரிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க நவம்பர் 2014 முதல் ஜனவரி 2015 வரை மேற்படி நிறுவனத்திற்காக விளம்பரத்தை செய்ததாகவும், அதற்கான தொகை ரூ.75,19,039/- த்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்தது சம்பந்தமாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மேற்படி மூன்று நபர்களும் விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு .சங்கர் ஜிவால் இ.கா.ப. அவர்களின் உத்தரவின் பேரிலும் திருமதி.P.C தேன்மொழி, கூடுதல் ஆணையாளர், மத்திய குற்றப்பிரிவு அவர்களின் அறிவுறுத்தலின் பேரிலும் மத்திய குற்றப்பிரிவு, EDF-1 அணி -2 காவல் ஆய்வாளர் அவர்களின் தலைமையிலான காவல் தனிப்படையினர் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் SCO. 22. 23. K10, First floor, Feroze Gandhi Market, என்ற விளம்பர கம்பெனியின் அலுவலகத்தில் முன்பு இருந்து திரு. சஞ்சய் குமார் சர்மா (எ) சர்மா. ஆ/ வ 51 த/ பெ தால்கேஷ்வர் சர்மா என்பவரை கடந்த 08.03.2022அன்று கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து CCB& CBCID சிறப்பு நீதிமன்ற நடுவர் அவர்களின் உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
MENAGA
Inspector of police
EDF-1 Term 2
Chennai crime branch
Vepery-Chennai-600007