காரிமங்கலம் அருகே சட்டவிரோதமாக விவசாய நிலத்தில் பதுக்கி வைத்திருந்த 11 இலட்சம் மதிப்பிலான 2 டன் குட்கா பறிமுதல் ஒருவர் கைது.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் சுற்று வட்டார பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா ஹான்ஸ் பான் மசாலா மற்றும் போதை வஸ்துக்கள் ஜோராக விற்பனை நடைப்பெற்று வருவதாக மாவட்ட காவல்துறைக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவின் பேரில் 2.0 காரிமங்கலம் போலீசார் தீவிர விசாரனை மேற்கொண்டு வந்தனர் . இந்த நிலையில் காரிமங்கலம் அருகே குப்பாங்கரை கிராமத்தில் குமார் என்பவரின் விவசாய நிலத்தில் உள்ள பன்னை வீட்டில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் மற்றும் குட்கா பான்மசாலா உள்ளிட்ட சுமார் 11லட்சம் மதிப்பிலான 2 டன் போதைப்பொருட்கள் 70 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். காரிமங்கலம் போலீஸார் குட்காவை பறிமுதல் செய்து குற்றவாளி குமாரை கைது செய்து சிறையில் தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து துணை காவல் கண்கானிப்பாளர் தினகரன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரனை நடத்தி வருகிறார்.
.