மதுரையில் கோவில் நிர்வாகியை தாக்கி பணம் பறித்த ரவுடிகள் கைது தல்லாகுளம் போலீசார் அதிரடி நடவடிக்கை
மதுரை பீபிகுளம் இந்திரா நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் வயது 51/22, இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் அந்தப்பகுதியில் உள்ள சக்தி மாரியம்மன் கோவில் நிர்வாகியாகவும் உள்ளார். நேற்று மதியம் இவர் கோவிலுக்கு வந்தார் அங்கு பதுங்கியிருந்த 4 பேர் பாலகிருஷ்ணனை கத்தியை காட்டி பணம் 2 ஆயிரத்தை பறித்து சென்றனர் இது குறித்து பாலகிருஷ்ணன் தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகாரளித்தார் மாநகர காவல் ஆணையர் திரு செந்தில்குமார் மாநகர தெற்கு துணை ஆணையர் தங்கத்துரை தல்லாகுளம் உதவி ஆணையர் திரு. சுரேஷ்குமார் ஆகியோர்களின் உத்தரவின் பேரில் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசிரணை நடத்தினர். அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர் அப்போது கோவில் நிர்வாகி பாலகிருஷ்ணணிடம் கத்தி முனையில் பணம் பறித்தது பழைய ரவுடிகள் என்பது தெரிய வந்தது இதனையடுத்து போலீசார் நள்ளிரவில் சோதனை நடத்தி 4 பேரை பிடித்து வந்து காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர் அவர்கள் வாகைகுளம் பார்த்தசாரதி வயது 19/22, பீபிகுளம் பர்மா நகர் பூபதி ராகவேந்திரன் வயது 19/22, கூடல் புதூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்த சினேக் நாகராஜன் வயது 27/22, நரிமேடு மருதுபாண்டி நகர் சூரியா என்ற நரேன் வயது 25/22 என்பது தெரிய வந்தது அவர்கள் குற்றத்தை ஒப்பு கொண்டதை தொடர்ந்து 4 பேரையும் நீதி மன்ற காவலுக்கு உட்படுத்தினர்