மதுரை ஸ்மார்ட் சிட்டிஆலோசனைக்குழகூட்டம்
மதுரை ஸமார்ட் சிட்டி ஆலோசனைக் குழு கூட்டம் இரண்டாவது முறையாக கடந்த 17/9/21 அன்று நடைபெற்றது இத்திட்டத்தின் கீழ் மதுரையில் நடைபெற்று வ௫ம் அனைத்துப் பணிகளையும் விரிவாக ஆய்வு செய்தார்கள். பெரியார் பேருந்து நிலைய பணி மற்றும் வைகைகரை சாலை, சங்கப் பூங்கா அமைக்கும் பணி மற்றும் பாரம்பரியச் சின்னங்களை பாதுகாத்து, மற்றும் மேம்படுத்துதல் பாதாளசாக்கடை, திட்டம் நகர போக்குவரத்தினை ஒழுங்குபடுத்துதல். ஆகிய ஜந்து முக்கிய பிரச்சனைகள் சம்பந்தமாக, தனித்தனியான ஆய்வுக் கூட்டம் நடத்தி முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவர் மதுரை மாவட்ட ஆட்சியர், திரு. அனீஷ்சேகர், இ.ஆ.ப ,அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழக நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை, அமைச்சர். திரு. பழனிவேல் தியாகராஜன், மதுரை மாநகராட்சி ஆணையாளர், தி௫.கார்த்தி இ.ஆ.ப. மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் , கோ.தளபதி, மு.பூமிநாதன், வி.வ.ராஜன் செல்லப்பா மற்றும் உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.