காரைக்குடி சுற்று வட்டார பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி ஆன்லைன் மற்றும் வாட்ஸ்அப் மூலமாக கோவிலூர் மானகிரி ரோடு, முத்துராமன் நகரைச் சார்ந்த பத்மநாபன் மகன் முரளிராஜா வயது 45 மற்றும் அவரது மனைவி புவனேஸ்வரி வயது 38 இருவரும் புதிதாக வீடு வாங்கி அதில் லாட்டரி சிட்டு ஏஜென்டாக பிரத்தியோக மொபைல்போன் வாயிலாக செயல்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் குன்றக்குடி சார்பு ஆய்வாளர் திருமதி மணிமொழி தலைமையிலான காவல் படையினர் லாட்டரி சீட்டு மொத்தமாக விற்பனை செய்த முரளிராஜா மற்றும் அவரது மனைவி புவனேஸ்வரி இருவரையும் கைது செய்தனர் மற்றும் இருவரும் இப்பகுதியில் ஏஜென்ட் ஆகவும் அவர்களுக்கு மதுரை திருச்செங்கோடு போன்ற மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து லாட்டரி சீட்டு எண்களை வாட்ஸ் அப் மூலம் குறுந்தகவல் அனுப்பியும் கூகுள் பே மூலமாக பணப்பரிமாற்றம் செய்தும் உள்ளனர். மேற்படி இருவரும் விற்பனைக்காக தனியாக 4 செல்போன் பயன்படுத்தப்பட்டதும், மனைவி புவனேஸ்வரி பெயரில் பல்வேறு வங்கிகளில் வங்கி கணக்கு ஆரம்பித்து லட்சக்கணக்கில் பணப்பரிமாற்றம் நடந்ததை கண்டறிந்தும், அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ஹோண்டா டியோ ஸ்கூட்டி பைக் ஒன்றும், 4 செல்போன்கள் மற்றும் ரூபாய் 19,200 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இருவரையும் சார்பு ஆய்வாளர் திருமதி. மணிமொழி தலைமையிலான காவல் துறையினர் கைது செய்து காரைக்குடி நீதிமன்றத்தில் ஆஜர் செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இவர்களுக்கு ஏற்கனவே இப்பகுதியிலுள்ள காவல்நிலையங்களில் லாட்டரி சீட்டு விற்றது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன இருந்தபோதிலும் தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றனர் என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் எண்களை கொண்டு ஆராய்ந்தால் மாநிலத்தில் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி வியாபாரிகளை கண்டறியலாம் என்றும் புவனேஸ்வரியின் பல்வேறு வங்கி கணக்குகளையும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கூறிவருகின்றனர்.