Police Department News

தொட்டிக்குள் இறங்கியவர்கள் அடுத்தடுத்து பலி.. மதுரையில் விஷ வாயு தாக்கி 3 பேர் மரணம்

தொட்டிக்குள் இறங்கியவர்கள் அடுத்தடுத்து பலி.. மதுரையில் விஷ வாயு தாக்கி 3 பேர் மரணம்

மதுரைநேரு நகரில் விஷவாயு தாக்கி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் பலியானது தொடர்பாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் பழங்காநத்தம் நேரு நகர் பகுதியில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி ஆனார்கள். இரவு நேதாஜி நகரில் கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்தபோது இந்த சம்பவம் நடைபெற்றது.
சுத்தம் செய்த போது
சிவக்குமார் என்ற மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்துள்ளார். அப்போது அவர் மயங்கி விழுந்த நிலையில் அவரை காப்பாற்ற அடுத்தடுத்து லட்சுமணன், சரவணன் என்ற இரண்டு ஊழியர்கள் உள்ளே இறங்கி உள்ளனர். உள்ளே மயங்கி விழுந்த சிவக்குமாரை முதலில் சத்தமாக கத்தி எழுப்ப முயன்று உள்ளனர். பல முறை கத்தியும் சிவக்குமார் எழுந்திருக்கவில்லை.

அவரிடம் கயிறை தூக்கி வீசி எப்படியாவது தூக்கலாம் என்று முயன்று உள்ளனர். ஆனால் இரவு நேரம் என்பதால் சரியாக கண் தெரியவில்லை. லட்சுமணன், சரவணன் என்ற இரண்டு ஊழியர்கள் உள்ளே இறங்கி உள்ளனர். உள்ளே சென்று அவரை கயிறை கட்டி தூக்க முயன்று உள்ளனர். ஆனால் கயிரை கட்டிக்கொண்டு இருக்கும் போதே இரண்டு பேரும் அங்கேயே மயங்கி சிவக்குமார் மீது விழுந்துள்ளனர்.
உள்ளேயே விஷ வாயு தாக்கி அவர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி ஒப்பந்த நிறுவனம் மீது இது தொடர்பாக வழக்கு பதியப்பட்டுள்ளது. தனியார் நிறுவன உரிமையாளர் விஜயானந்த், ரமேஷ், லோகநாதன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் கழிவு நீரை சுத்தம் செய்ய அனுப்பியது, இரவு நேரத்தில் தொட்டிக்குள் இறக்கியது, ஊழியர்களுக்கு மாஸ்க் கொடுக்காமல் இருந்தது, போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமல் இருந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.