Police Department News

மாரண்டஅள்ளி அருகே 40 க்கும் மேற்பட்ட மா மரங்களை வெட்டி சாய்த்த 4 பேர் கைது.

மாரண்டஅள்ளி அருகே 40 க்கும் மேற்பட்ட மா மரங்களை வெட்டி சாய்த்த 4 பேர் கைது.

பாலக்கோடு ஏப்ரல் 21; மாரண்டஅள்ளி அருகே நடு குட்லான அள்ளியை சேர்ந்த விவசாயி ஆனந்தன் என்பவருக்குச் சொந்தமான 40 மா மரங்களை இரவோடு இரவாக வெட்டி சாய்த்த திண்ண குட்லான அள்ளியை சேர்ந்த 4 பேர் கைது மேலும் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

மாரண்டஅள்ளி அருகே நடு குட்லான அள்ளியை சேர்ந்த திம்மே கவுண்டர் மகன் ஆனந்தனுக்கு சொந்தமான பத்து ஏக்கர் நிலத்தில் மா மரம் பயிரிட்டுள்ளார் தற்பொழுது கோடைக் காலம் என்பதால் மாமரங்களில் மாங்கனிகல் மற்றும் மா பிஞ்சுகள் காய்த்துள்ள நிலையில் தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை சுற்றி கம்பிவேலி அமைப்பதற்காக நேற்று முன்தினம் கல் கம்பங்கள் மற்றும் வேலிகளை கொண்டு வந்து நிலத்தில் கம்பங்களை நடும் பணியை தொடங்கிய நிலையில் நேற்று இரவு விவசாயி ஆனந்தன் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு உறங்கச் சென்ற பிறகு இரவு சுமார் 12 மணி அளவில் பத்திற்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் நிலத்தில் புகுந்து சுமார் 25 வருடங்கள் வயதான 40க்கும் மேற்பட்ட மா மரங்களை இரவோடு இரவாக வெட்டி சாய்த்து விட்டு தலைமறைவாகி விட்டனர். ஆனந்தன் நிலத்திற்கு பக்கத்து நிலத்தில் உள்ள விவசாயி ஆனந்தனுக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர் மாரண்டஅள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததின் அடிப்படையில் திண்ண குட்லான அள்ளியை சேர்ந்த இராஜசேகர்(35),கோவிந்தன்(50),மாதையன்(32)முருகன் (50) ஆகிய நான்குபேர் கைது செய்யப்பட்டு தர்மபுரி சிறையில் அடைக்கப்பட்டனர்.மேலும் தலைமறைவான 5 பேரை மாரண்ட அள்ளி போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இரவோடு இரவாக 40 மரங்களை வெட்டி சாய்த்த இச்சம்பவம் மாரண்ட அள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.