Police Department News

கருவிழியால் குற்றவாளியை கண்றிலாம் பெண் டி.எஸ்.பி., அசத்தல் ஆய்வறிக்கை

கருவிழியால் குற்றவாளியை கண்றிலாம் பெண் டி.எஸ்.பி., அசத்தல் ஆய்வறிக்கை

குற்றவாளியின் தனி மனித உரிமை பாதிக்காமல் அவரது கருவிழி அசைவதை வைத்து உண்மை குற்றவாளியை கண்டறிவதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வறிக்கையை செஞ்சி டி.எஸ்.பி., சமர்பித்துள்ளார்.

மத்தியப்பிரதேசம் மாநிலம் போப்பால் நகரில் இந்திய காவல் துறை அறிவியல் மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினரான மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா இந்திய காவல் துறையில் புதிய தொழில் நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும் என உறுதியளித்தார். இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் குற்றங்களை தடுக்கும் தொழில் நுட்பங்கள் குறித்த ஆய்வறிக்கை மாநாட்டில் சமர்பிக்கப்பட்டது. தமிழகத்திலிருந்து ஒரே ஒரு ஆய்வறிக்கை மட்டுமே ஏற்க்கப்பட்டது. அதுவும் செஞ்சி டி.எஸ்.பி., பிரியதர்ஷினி வயது 27/2022, சமர்பித்த அறிக்கைதான் அது. இவர் 2019 ல் தமிழக காவல் துறையில் டி.எஸ்.பியாக பணியில் சேர்ந்தவர். இவரது தந்தை திரு. ஆறுமுகசாமி அவர்கள் மதுரை போக்குவரத்து துணை ஆணையராக பணியில் உள்ளார். பிரியதர்ஷினி கூறியதாவது. போலீஸ் விசாரணையின் போது தனி மனித சுதந்திரம் உரிமை பாதிக்கக்கூடாது என இந்திய அரசியல் சட்டங்கள் வலியுறுத்துகின்றன குற்றவாளிகளை கையாளுவதில் சில வழிமுறைகளை பின்பற்ற வேன்டியுள்ளது. அதற்கேற்ப இந்தியாவில் போதிய தொழில் நுட்பங்கள் இல்லை. டி.என்.ஏ., சோதனையை தாண்டி அடுத்த கட்ட தொழில் நுட்பத்திற்கு இன்னும் நாம் செல்ல வேண்டியதுள்ளது ஆதார் அட்டை பதிவு செய்யும் போது கருவிழி பதிவு செய்வது அறிமுகமானது.
இதை அடிப்படையாக கொண்டு குற்றவாளியின் தனி மனித உரிமை பாதிக்காமல் அவரது கருவிழி அசைவதை வைத்து உண்மையை கண்டறிவதற்கான தொழில் நுட்பாம் குறித்து ஆய்வறிக்கை தயாரித்து சமர்பித்ததோடு அது குறித்து மாநாட்டில் பேசினேன் தற்போது இவ்வசதியை அமெரிக்காவின் நியூயார்க் போலீசார் பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.