Police Department News

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று 20/11/19 ம் தேதி கஞ்சா வியாபாரி களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையில்

விருதுநகர் மாவட்ட செய்திகள்:-

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று 20/11/19 ம் தேதி கஞ்சா வியாபாரி களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையில் ராஜபாண்டி 29/19 S/oதிருவாசகம் என்பவர் மாலை 5 மணி அளவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் திரு வெங்கடேசன் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் திரு பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் திரு மகேஸ்வரன் மற்றும் அவர்களின் தனிப்படையினர் சிறப்பாக செயல்பட்டு கொலை நடந்து 24 மணி நேரத்திற்கு வழக்கின் எதிரியாகிய கஞ்சா கண்ணன் 26/ 19 என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்

மேலும் எதிரியை கைது செய்ய உதவிய மதுரை மாவட்டம் ஊர்மச்சிகுளம் தனிப்படை சார்பு ஆய்வாளர் குமரகுரு மற்றும் விருதுநகர் மாவட்ட cyber crime பெண் சார்பு ஆய்வாளர் செல்வி வித்தியா தேவி ஆகியோரின் பங்களிப்பானது மிகவும் பாராட்டுக்குறியது.

போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக
VRK.ஜெயராமன்MA,Mphil மாநிலசெய்தியாளர்
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published.