தருமபுரி மாவட்டம் கர்நா டகா மாநிலத்திற்கு கடத்துவதற்காக 460 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த 2 பேர், தர்மபுரி அருகே கைது செய்யப்பட்டனர்.
தர்மபுரி குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் எஸ்ஐ செந்தில் முருகன் தலைமையில், எஸ்ஐ முரளி, சிறப்பு எஸ்ஐகள் ராமச்சந்திரன், செந்தில்குமார், ஏட்டுகள் வேணுகோ பால், குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர், தர்மபுரி- அரூர் மெயின் ரோட்டில் கண்கா ணிப்பு பணியில் ஈடுபட் டனர். மேலும், சுற்றுப் புற பகுதியில் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். அப்போது, தர்மபுரி மான்காரன் கொட் டாய் ஈஸ்வரன் கோயில் அருகில், ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த மணி மகன் செல்வராஜ்(32), குழந்தைகவுண்டன் கொட்டாயைச் சேர்ந்த அன்பு (35) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
இதில், கர்நாடகா மாநி லத்திற்கு கடத்துவதற் காக ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. உடனே இருவரையும் போலீசார். கைது செய்தனர். அவர்க ளிடமிருந்து 4600 கிலோ ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.