Police Recruitment

திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் சீர்மிகு பணியை பாராட்டி வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் வழங்கிய தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் சீர்மிகு பணியை பாராட்டி வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் வழங்கிய தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 109 (கஞ்சா 8, புகையிலை 1, போக்சோ 06, சட்டம் ஒழுங்கு 94) நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. . குற்றசம்பவங்களில் ஈடுபட்ட 470 நபர்களிடமிருந்து நன்னடத்தை பிணை பெறப்பட்டு நன்னடத்தை பிணையை மீறி குற்றம் புரிந்த 21 நபர்கள் கைது‌ செய்யப்பட்டுள்ளனர். பொது மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அதிக பாரம் ஏற்றி வந்த 112 லாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் 13 கொலை சம்பவங்கள் தடுக்கப்பட்டுள்ளது. கூடங்குளத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் 60% சம்பளம் பெற்று வந்த நிலையில் அவர்களை ஏமாற்றிய நபரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒப்பந்த ஊழியர்களுக்கு முழு சம்பளம் கிடைக்கப் பெற செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பின்னர், பெண்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து மிரட்டல் விடுத்த நபரை கைது செய்து எதிரிக்கு தமிழகத்தில் முதல்முறையாக சைபர் கிரைம் காவல் காவல்துறையினரால் நன்னடத்தை பிணை பெறப்பட்டது. மேலும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறிவுரையின்படி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் மனு அளித்த நபருக்கு இணைய வழி மூலமாக ஏமாற்றப்பட்ட ரூ.1 இலட்சத்து 24 ஆயிரத்து 900 பணத்தை 72 மணி நேரத்தில் மீட்டுக் ஒப்படைத்ததற்காகவும், கடந்த ஒரு மாதத்திற்கு முன் இணையவழி மூலம் ஏமாற்றப்பட்ட ரூ.2 இலட்சத்து 90 ஆயிரம் பணத்தை மீட்டு உரியவரிடம் கொடுத்ததற்காகவும், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி ஏமாற்றிய நபரை கைது செய்ததற்காகவும் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திரு.ராஜ், உதவி ஆய்வாளர் திரு.ராஜரத்தினம், தலைமை காவலர்கள் திரு.அந்தோணி பிச்சை, திரு.சண்முகசுந்தரம் காவலர்கள் திரு.ரஞ்சித், திரு.திவாகர், திரு.ராம்நயினார், திரு.ஷேக் முகமது ஆகியோருக்கும்

மேலும் முன்னீர்பள்ளம் அருகே நடந்த குவாரி விபத்தில் எதிரிகளை விரைந்து கைது செய்ய உதவியாக இருந்த காவல் ஆய்வாளர் திரு.சந்திரமோகன், தலைமை காவலர்கள் திரு.செல்லதுரை, முதல்நிலை காவலர் திரு.சுரேஷ், மற்றும் திரு.பாலகிருஷ்ணன் ஆகியோருக்கும்

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய எதிரிகளை கைது செய்தற்காகவும், கொலை சம்பவம் நடக்காமல் தடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு எதிரிகளை கைது செய்ததற்காகவும் மற்றும் கஞ்சா விற்பனை செய்த எதிரிகளை கைது செய்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் எதிரிகளை கைது செய்ததற்காகவும் உதவி ஆய்வாளர் திரு.பிரபு பாஸ்கரன், உதவி ஆய்வாளர் திரு.செல்வகுமார், தலைமை காவலர்கள் திரு.ராமச்சந்திரன் திரு.கண்ணன், திருசரவணன், முதல்நிலை காவலர் திரு.ஜேக்கப் மற்றும் காவலர் திரு.பழனி ஆகியோரின் சீர்மிகு பணியை பாராட்டி தமிழக டிஜிபி அவர்கள் பாராட்டி வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.