Police Recruitment

காவலர் வன்முறை தடுப்பு பற்றி காவல் துறையினருக்கு விழிப்புணர்வு வழங்கிய தமிழக D.G.P

காவலர் வன்முறை தடுப்பு பற்றி காவல் துறையினருக்கு விழிப்புணர்வு வழங்கிய தமிழக D.G.P

காவல் நிலையங்களில் ஏற்படும் மரணங்களை முற்றிலும் தடுத்து காவல் நிலைய மரணங்கள் இல்லாத நிலையை உறுதி செய்யும் விதமாக (Prevention of custodial violence) காவல் துறையினர்களுக்கு விழிப்புணர்வு எற்படுத்த தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் Dr.C.சைலேந்திரபாபு IPS.அவர்களின் சீரிய முயற்ச்சியில் தமிழக காவல் துறையும் “Voice of Voiceless” என்ற அமைப்பை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகளும் இணைந்து காவல் துறையிலுள்ள அனைத்து காவல் ஆளினர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கருத்தரங்குகளை நடத்த முயற்ச்சி மேற்கொள்ளப்பட்டது அதன் முதல் நிகழ்சியாக திருச்சி மாநகர் மற்றும் மத்திய மண்டல காவல் துறையினர்களுக்கான கருத்தரங்கு கடந்த 21.05.2022 ஆம் தேதி நிகழ்த்தப்பட்டது. அதன் தொடர்சியாக மதுரை மாநகர் மற்றும் தென் மண்டலத்தில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த காவல் துறையினர்களுக்கான ஒரு நாள் காருத்தரங்கு இன்று 02.07.2022 ஆம் தேதி மதுரை தெப்பக்குளம் தியாகராஜர் கலைக் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்சியில் தமிழக காவல் துறை இயக்குனர் திரு. Dr. C.சைலேந்திரபாபு IPS. மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. T.செந்தில்குமார் IPS. தென் மன்டல காவல் துறை தலைவர் திரு. அஸ்ரா கார்க் IPS. விருதுநகர மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. M. மனோகரன் IPS. மாவட்ட நீதிபதி திரு.A.R.V. ரவி.மற்றும் திரு R.காந்தி MA.BL., மதுரை உயர் நீதி மன்ற கிளை மூத்த வழக்கறிஞர் ஆகியோர் கலந்து கொண்டு காவல் பாதுகாப்பில் ஏற்படும் மரணங்களை தடுப்பது பற்றி விழிப்புணர்வு உறையாற்றினார்கள் இக்கருத்தரங்கில் மதுரை மாநகர் திருநெல்வேலி மாநகர் மற்றும் தென் மண்டலாத்தை சேர்ந்த காவல் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.