மதுரையில் நகைக்காக லாட்ஜ் மேலாளரை கொலை செய்த வட மாநில வாலிபர் கைது
மதுரை டவுன் ஹால் ரோட்டில் உள்ள ரகு லாட்ஜில் மேலாளராக பணிபுரிபவர் தர்மராஜன் இவர் கடந்த 7 ம் தேதி காலை 7 மணியளவில் லாட்ஜின் வரவேற்பறையில் இறந்து கிடப்பதாக அவரது மனைவி ஜெயக்குமாரி என்பவருக்கு கிடைத்த தகவலின்படி அவர் அங்கு சென்று பார்த்த போது அவரது கணவர் கழுத்தில் காயங்கலோடு இறந்து கிடந்ததாகவும் அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயின் மற்றும் ஒன்னரை பவுன் எடையுள்ள 2 தங்க மோதிரங்களும் காணவில்லை என்றும் கணவரின் இறப்பில் சந்தேகம் உள்ளது எனக் கூறி நடவடிக்கை எடுக்குமாறு கொடுத்த புகாரின்படி C1, திடீர் நகர் காவல் நிலைய குற்ற எண் 451/2022, குற்ற விசாரணை முறை சட்டபிரிவு 174 படி வழக்கு பதிவு செய்யப்பட்டு தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவ்வழக்கின் புலன்விசாரணையில் ரகு லாட்ஜிலிருந்த CCTV கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் மேற்படி லாட்ஜில் கடந்த 4 நாட்களாக ரூம் வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த ராஜஸ்தான் மாநிலம் பிக்கானிர் மாவட்டம் ஜசுசார் கேட் என்ற முகவரியை சேர்ந்த கோபால் கிஷான்தாகா வயது 30/2022, தகப்பனார் பெயர் பாகிரத் தாகா என்பவர் 7ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு ரூமை காலி செய்து சென்றிருந்ததால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு மேற்படி நபரை தேடி வந்த நிலையில் மதுரை ரயில்வே ஜங்சன் அருகில் வைத்து பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் ரகு லாட்ஜில் தர்மராஜனை கொலை செய்து அவர் அணிந்திருந்த நகைகளை திருட வேண்டும் என திட்டம் தீட்டி இரவு சுமார் 10.30 மணியளவில் லாட்ஜில் உள்ள சிசிடிவி கேமரா வயரை துண்டித்து விட்டு ரூமில் போய் தங்கி விட்டு பின்பு அதிகாலை 3.30 மணியளவில் அங்கு தூங்கி கொண்டிருந்த இறந்து போன தர்மராஜனை எழுப்பி ரூமை காலி செய்வதாக கூறி காலி செய்து விட்டு வெளியே செல்லாமல் பாத் ரூம் போய் வருகிறேன்
என கூறி மீண்டும் லாட்ஜூனுள் சென்று விட்டு சிறிது நேரம் கழித்து வரவேற்பு அறைக்கு வந்து தர்மராஜன் தூங்கிய பிறகு செல் போன் சார்ஜர் வயரை வைத்து தர்மராஜனை கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு அவர் அணிந்திருந்த தங்க செயின் மற்றும் மோதிரம் ஆகியவற்றை திருடி சென்றதாக வாக்கு மூலம் கொடுத்துள்ளார் அதன் பேரில் எதிரியை கைது செய்து திருடப்பட்ட நகைகளை மீட்டு எதிரியை நீதி மன்ற காவலுக்கு அனுப்பினர்
இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு எதிரியை கைது செய்து திருடப்பட்ட நகைகளை மீட்ட தனிப்படையினரை மதுரை மாநகர காவல் ஆணையர் மற்றும் துணை ஆணையர் ஆகியோர் வெகுவாக பாராட்டினார்கள்.