கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபட்ட எதிரிகளுக்கு பத்து வருட சிறை தண்டனை விதித்த மதுரை மகிளா நீதிமன்றம் உத்தரவு.
மதுரை மாவட்டத்தில் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளில் விரைந்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அந்தந்த புலன் விசாரணை அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டுள்ளது
அந்தவகையில் கடந்த 2012 ஆம் ஆண்டு நாகமலை புதுக்கோட்டை காவல்நிலையத்தில் தாக்கலான அப்பாவி பெண்ணை கற்பழிப்பு செய்ததாக பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்கில் ஈடுபட்ட மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த 1.முருகன் 59, த/ப பொன்னுச்சாமி, 2.நாக பாண்டி 27, த/ பெ நாகராஜ் நாகமலை புதுக்கோட்டை. 3. முனியாண்டி 56, த/பெ மெய்யன் நாகமலை புதுக்கோட்டை. 4. விக்னேஸ்வரன் த/பெ முருகன், 5. பழனிவேல் த/பெ கருப்பசாமி 6. சங்கர் த/பெ பாலகுருசாமி மதுரை என்பவர்களுக்கு எதிராக பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்கும் தனி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் மேற்படி எதிரிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூபாய் 4000/- ஆயிரம் அபராதம் விதித்து இன்று 03.08.22 தேதி தீர்ப்பளித்துள்ளது.
இதேபோல் மதுரை மாவட்டத்தில் தாக்கியுள்ள பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விரைந்து புலன்விசாரணை முடித்து உரிய நீதிமன்றத்தில் குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை சட்டத்தின் மூலம் கண்டிப்பாக வழங்கப்படும் என்றும் எதிரிகளுக்கு விரைந்து தண்டனை பெற்று தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சிவ பிரசாத் இ .கா .பா அவர்கள் தெரிவித்துள்ளார்கள்
மேலும் இவ் வழக்கில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் ஆளுநர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள்