மதுரையில் மாணவ மாணவியர்களுக்கு போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் போலீஸ் துணை கமிஷனர் வேண்டுகோள்
மதுரையில் உள்ள பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மதுரை மாநகர தெற்கு துணை கமிஷனர் திரு. சீனிவாச பெருமாள் பேசியதாவது தமிழகத்தை சிறந்த முறையில் உருவாக்குவது மாணவர்கள் கையில்தான் உள்ளது எனவே போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு மற்றும் அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல் பதுக்கலுக்கு முற்று புள்ளி வைக்க வேண்டும் பாலியல் தொல்லை தொடர்பாகவும் தைரியமாக புகார் அளிக்கலாம் நாங்கள் உறுதியாக நடவடிக்கை எடுப்போம் இவ்வாறு அவர் பேசினார் இதனை தொடர்ந்து மாணவ மாணவியர்கள் போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்து கொண்டனர் பின்னர் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பேரணி நடைபெற்றது இதில் செல்லூர் உதவி கமிஷனர் திரு. விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்
மதுரை தெப்பக்குளம் பகுதியில் பள்ளி கல்லூரி மாணவர்கள், மாணவிகள் போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு,2 ஆம் நாள் பேரணி நடைப்பெற்றது
இந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்டம் போக்கு வரத்து காவல் துணை ஆணையர் திரு. ஆறுமுகசாமி அவர்கள் மற்றும் போக்குவரத்து காவல் உதவி ஆணையர்,செல்வின் அவர்கள் மற்றும்
மதுரை தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி அவர்கள் கலந்து கொண்டு போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி மிக சிறப்பாக நடைப்பெற்றது.
இந்த பேரணிக்கு போக்குவரத்து காவல் துணை ஆணையர் கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 10 க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர் மாணவிகள் சுமார் 1000 பேர் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி ,காலை 10 மணிமுதல் ஆரம்பித்து மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் 16 கால் மண்டபம் பகுதி முதல், காமராஜர் சாலை, வழியாக முனிச்சாலை, மற்றும் குயவர்பாளையம், செயின்ட் மேரிஸ் பள்ளி வரை பேரணி நடைப்பெற்றது.
இந்த நிலையில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் மற்றும் இவர்களுடன் ரோட்டரி சங்கத்தினர் கலந்து கொண்டார்கள்.