பாலக்கோடு அருகே தொழிலாளி கொலை கூலிப்படையை வைத்துக்கொண்ட மாமியார் கைது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே அண்ணாமலைஅள்ளி அரசு மதுபான கடை முன்பு கடந்த 19ஆம் தேதி வாலிபர் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார் இதுகுறித்து பாலக்கோடு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர் அப்போது அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கருக்கனஅள்ளியை சேர்ந்த தொழிலாளி சூர்யா வயது 41 என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை குறித்து பாலக்கோடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். காவல்துறையினர் விசாரணையில் மாமியார் மருமகனை கூலிப்படை வைத்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் சூர்யாவின் மாமியார் காரிமங்கலத்தைச் சேர்ந்த சகுந்தலா 47 பிடித்து தீவிர விசாரணை நடத்தினர் அப்போது அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார் . சூர்யா மதுவுக்கு அடிமையாகி வேலைக்குச் செல்லாமல் தினமும் கொடுத்து விட்டு வந்து மகளிடம் பணம் கேட்டு அடித்து துன்புறுத்தி வந்தார். இதுகுறித்து எனது மகள் கூறினார் இதனால் சூர்யா இறந்தால்தான் தனது மகள் நிம்மதியாக இருப்பாள் என கருதி சூர்யாவை கூலிப்படை வைத்து கொலை செய்ய முடிவு செய்தேன்.சம்பவத்தன்று கூலிப்படையிடம் சூர்யாவுக்கு மது வாங்கி கொடுக்க பணம் கொடுத்து அனுப்பினேன் அதன்படி அவர்கள் சூர்யாக்கு மது வாங்கி கொடுத்தனர் பின்னர் போதை ஏறியதும் சூர்யா மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார் அப்போது கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் சூர்யாவை அறிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தலைமறைவாகி விட்டனர். இவ்வாறு காவல்துறையிடம் தெரிவித்தனர். இதை அடுத்த சகுந்தலாவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் பாலக்கோடு காவல்துறையினர் கூலிப்படையை தீவிரமாக தேடி வருகின்றனர்.