ஊத்தங்கரை அருகே வங்கியில் கொள்ளை அடிக்க திட்டம் போட்ட நான்கு நபர்களை வளைத்து கைது செய்த போலீசார்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பாம்பாறு அணை அருகே காரில் சென்று கொண்டிருந்த நபர்களை மடக்கி ஊத்தங்கரை போலிசார் சோதனை செய்ததில் காரில் வைத்திருந்த சிலிண்டர், வெல்டிங் மிஷின், ஏணி,கேபிள் ஓயர் மற்றும் இரும்பு ராட் இருந்ததை கண்டு விசாரணை நடத்தியதில் அவர்கள் நால்வரும் ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதியில் இருக்கக்கூடிய வங்கியில் திருட திட்டம் தீட்டியது அம்பலமானது.
இதில் ஒரு பெண் உட்பட மூன்று பேர் நேபாளம் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் நேபால் நாட்டைச் சேர்ந்தவர்கள் நேபாளத்தில் இருந்து இந்திய பகுதிக்கு பேருந்தில் வந்ததாகவும் இந்திய எல்லையில் இருந்து பெங்களூருக்கு ரயில் மூலம் வந்ததாகவும் பெங்களூரில் இருந்து வாடகை கார் எடுத்துக்கொண்டு வங்கிகளில் கொள்ளை அடிக்க ஊத்தங்கரை வந்ததாகவும் கைதானவர்கள் தெரிவித்தனர்.
ஊத்தங்கரை போலீசார். பெங்களூரைச் சேர்ந்த ரவி பண்டாரி, நேபாளத்தைச் சேர்ந்த தேவராஜ்,
ஜாகட் , நேபாளத்தை சேர்ந்த பெண்மணி பூனம் ஆகிய நால்வரை கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் அவர்களிடமிருந்து அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
இவர்களுடன் தொடர்பிலிருந்த போலீசார் மடக்கி பிடிக்கும் பொழுது தப்பி ஓடிய அமன்தாபா என்ற கர்நாடகத்தைச் சேர்ந்த நபர் தலைமறைவாக இருப்பதால் அவனைப் பிடிக்க ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் அமல அட்வின் அறிவுறுத்தலின்படி காவல் ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் நேரு மற்றும் காவலர்கள் பிரபாகரன், அதியமான், நாசில் போலீசார் பெங்களூரு சென்று தேடி வருகின்றனர்.