திருச்சியில் தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி
திருச்சி கே.கே.நகரில் உள்ள ரைப்பில் கிளப்பில் தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சூடும் போட்டி இன்று தொடங்கியது. திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் இந்த போட்டியினை தொடக்கி வைத்தார். இன்று முதல் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
போட்டிகளில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் சேர்ந்த 1100 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். 10 மீட்டர் மற்றும் 50 மீட்டர் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறுபவர்கள் டெல்லியில் தேசிய அளவில் நடைபெறும் துப்பாக்கி சூடும் போட்டியில் கலந்து கொள்வார்கள்.
இந்த போட்டி 12 முதல் 14 வயது, 15 வயது முதல் 18 வயது, 19 வயது முதல் 24 வயது, 25வயது முதல் 45 வயது, 46 வயது முதல் 60 வயது, மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோர் என அந்தந்த வயதுக்கு ஏற்ப போட்டிகள் நடத்தப்படுகிறது. 24 ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு பின் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.