மதுரையில் குட்கா விற்ற கடைகளுக்கு சீல்
மதுரையில் நேற்று கீழமாரட் வீதியில் உள்ள ஸ்டார் டீ கடை உட்பட 9 கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ததாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.கீழமாரட் வீதி ஸ்டார் டீ கடையில் ஏற்கனவே குட்கா வைத்து விற்பனை செய்ததாக 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன. விளக்குத்தூண் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் பரிந்துரைப்படி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராம பாண்டியன் தலைமையில் அலுவலர்கள் இக்கடைக்கு சீல் வைத்தனர். இதுவரை சமயநல்லுார், அலங்காநல்லுார், பேரையூர், டி. கல்லுப்பட்டியில் குட்கா விற்பனை செய்த 8 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மாநகராட்சியில் கீழமாரட் வீதி கடையைத் தொடர்ந்து திருநகர், திலகர் திடல் பகுதியில் உள்ள சில கடைகளுக்கு சீல் வைக்கப்பட உள்ளது.