
ரயில்வே பாதுகாப்பு படைதினம் கொண்டாட்டம்
மதுரை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை தினவிழா கொண்டாடப்பட்டது. ரயில் பயணிகள் பாதுகாப்பிற்காக 1872 ல் துவங்கப்பட்ட செக்யூரிட்டி படை 1985 செப்.,20ல் ரயில்வே பாதுகாப்பு படையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதை கொண்டாடும் வகையில் மதுரையில் ரயில்வே பாதுகாப்பு படையினர் யோகா, ஒற்றுமை ஓட்டம், ரத்ததானம், மரக்கன்று நடுதல், ஆதரவற்றோர் இல்லங்களில் உணவு அளித்தல் நிகழ்ச்சிகளை நடத்தினர். கோட்ட கமிஷனர் அன்பரசு, உதவி கமிஷனர் சுபாஷ், ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் பங்கேற்றனர்.
