மணப்பாறையில் கான்ட்ராக்டரிடம் 21 லட்சம் மோசடி பலபேரை திருமணம் செய்த தில்லாலங்கடி திருநங்கை.
விழுப்புரம் சந்தைபேட்டை கனகனந்தல் பகுதியில் வசித்து வந்தவர் பபிதா ரோஸ் வயது 30 திருநங்கையான இவர் திருச்சி மாவட்டம், வளநாடு அருகே உள்ள அ.புதுப்பட்டியில் அரண்மனை தோட்டம் அருகே சுமார் 8 சதுரத்தில் வீடு கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இவரது வீட்டை புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் கம்மாள தெருவை சேர்ந்த கட்டிட கான்ட்டிராக்டரான முருகேசன் என்பவர் ஒரு சதுர அடி ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கு கட்டித்தருவதாக ஒப்பந்தம் பேசி வீடுகட்டிக் கொடுத்துள்ளதுடன் கூடுதலாக சுற்று சுவரும் கட்டி கொடுத்துள்ளார்.
இது மட்டுமின்றி கான்ட்டிராக்டர் முருகேசனிடம், பபிதாரோஸ் ரூபாய் 10 லட்சம் கடனாகவும் வாங்கியுள்ளார். இந்நிலையில் தனக்கு வர வேண்டிய மொத்தம் ரூபாய் 21 லட்சத்தை பபிதா ரோஸிடம் முருகேசன் கேட்ட போது அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு தகாத வார்த்தைகளால் வசை பாடியுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட முருகேசன் இது தொடர்பாக வளநாடு போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான திருநங்கை பபிதா ரோசை தேடி வந்த நிலையில் துவரங்குறிச்சி இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் இன்று மாலை பபிதா ரோசை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பபிதாரோஸ் மணப்பாறை அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யப்பட்டு மணப்பாறை குற்றவியல் நீதித்துறை நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்டுள்ள பபிதாரோஸ் பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக ஏற்கனவே பல புகார்கள் உள்ளத்துடன், பலரையும் ஏமாற்றி பணம் பெற்றுகொண்டது என அடுக்கடுக்கான புகார்கள் நீண்டு கொண்டே சென்ற நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.