Police Department News

பூசாரியிடம் லஞ்சம் வாங்கிய இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் 2 பேர் கைது

பூசாரியிடம் லஞ்சம் வாங்கிய இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் 2 பேர் கைது

நாமக்கல் மாவட்டம் நைனாமலை வரதராஜப்பெருமாள் கோவில் செயல் அலுவலராக பணியாற்றி வருபவர் லட்சுமி காந்தன் வயது 51/22, இவர் சேத்தமங்கலம் அருகே உள்ள முத்துகாபட்டி பெரியசாமி கோவிலையும் கூடுதல் பொறுப்பாக கவணித்து வருகிறார்.

இந்த கோவிலில் பூசாரியாக இருப்பவர் அண்ணாதுரை இவரிடம் புரட்டாசி மாதம் அதிக அளவில் பக்தர்கள் வருவதால் 21 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் எனவும் இல்லையெனில் கோவில் பூஜை பணியை தொடர்ந்து செய்ய விடமாட்டேன் என்றும் செயல் அலுவலர் லட்சுமி காந்தன் கூறியதாக தெரிகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத பூசாரி அண்ணாதுரை இது குறித்து நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்
இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின் பேரில் ரசாயன பவுடர் தடவிய
21 ஆயிரத்தை அண்ணாதுரை நேற்று ஏளூர் அகரம் பகுதியில் வைத்து செயல் அலுவலர் லட்சுமி காந்தனிடம் கொடுத்துள்ளார்
அப்போது அங்கு மறைந்திருந்த இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையிலான குழுவினர் லட்சுமி காந்தனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்திய போது அவர் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ரமேஷ் வயது 45/22, லஞ்சம் வாங்கச் சொன்னதால்தான் பூசாரியிடம் லஞ்சம் வாங்கினேன் என கூறியுள்ளார் அதற்கான ஆடியோவையும் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் உதவி ஆணையர் ரமேஷையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.