Police Department News

பெண்கள் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண்கள் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்

சரசுவதி நாராயணன் கல்லூரியில் பெண்கள் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
பெண்கள் தங்களது பிரச்சினைகள் குறித்து பெற்றோர்கள், நண்பர்கள், ஆசிரியர்களிடம் கலந்து பேச தயங்கக்கூடாது என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் பேசினார்.

மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியின் பெண்கள் சட்ட விழிப்புணர்வு மையம் சார்பில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் முதல்வர் கண்ணன் தலைமையில் நடந்தது. இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் உமா வரவேற்றார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்விழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

பெண்கள் தங்களது பிரச்சினைகள் குறித்து பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கலந்து பேச தயங்கக்கூடாது. எந்த ஒரு பிரச்சினையையும் மனதில் வைத்து கொள்ளக்கூடாது. தேவைப்பட்டால் உடனடியாக காவல் துறையில் புகார் அளிக்க வேண்டும். தமிழக காவல் துறை பெண்களுக்கு எதிராக அனைத்து வகையான குற்றங்களை விசாரிக்க ”ஒன்ஸ்டாப் சென்டர்” என்ற அமைப்பை உருவாக்கி உள்ளது. இந்த அமைப்பின் கட்டணமில்லா உதவி எண்: 181. இதன் மூலம் பெண்கள் எல்லாவித புகாரையும் தெரிவிக்கலாம்.

காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் கிடையாது. மேலும் கவனிப்பாறற்று தனிமையில் மற்றும் துன்புறுத்தப்படும் முதியோர் குறித்து 14567 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக அவருக்கு உதவி கிடைக்கும் என்றார். சிறப்பு சார்பு ஆய்வாளர் சாந்தி, தலைமை காவலர் சிநேகலதா மற்றும் பலர் பங்கேற்றனர். மாணவி ராதிகா நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.