Police Department News

மதுரை தெப்பக்குளம் பகுதியில் புகையிலை பாக்கெட்டுகளை கடத்திய 3 பேர் கைது

மதுரை தெப்பக்குளம் பகுதியில் புகையிலை பாக்கெட்டுகளை கடத்திய 3 பேர் கைது

மதுரை தெப்பக்குளம் பகுதியில் புகையிலை பொருட்கள் கடத்தல் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதில் தொடர்புடைய குற்ற வாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

இதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில், மீனாட்சி கோவில் உதவி கமிஷனர் காமாட்சி ஆலோசனை பேரில், தெப்பக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி அவர்காளின் தலைமையிலான தனிப்படை அமைக்க ப்பட்டது.

அவர்கள் காமராஜர் சாலையில் வாகன தணிக்கை சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து அதில் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.

எனவே போலீசார் சந்தேகத்தின் பேரில், அந்த காரை சோதனை செய்தனர். அப்போது அதில் 502 புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் ரூ.41 ஆயிரத்து 300 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். புகையிலை கடத்திய 3 பேரையும் விசாரித்த போது அவர்கள் கிருஷ்ணாபுரம் குறுக்கு தெரு ராஜேஷ்குமார்வியாஸ் (வயது 49), புது மீனாட்சி நகர், அம்ஜத் தெரு ரமேஷ்குமார் (44), எல்லிஸ் நகர் சுரேஷ் பிஷ்னோய் (27) என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்து கார் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

காமராஜர் சாலை, அலங்கார் தியேட்டர் அருகே தெப்பக்குளம் போலீசார் வாகன தணிக்கை சோதனை நடத்தினார்கள். அப்போது 48 புகையிலை பாக்கெட்டுகளுடன் லட்சுமிபுரம் குறுக்கு தெருவை சேர்ந்த சிவச்சந்திரன்சிங் (47), பாலரங்காபுரம் முப்தராம் (43), தெற்குமாசி வீதி, வெங்கடாஜலபதி சந்து நிதிஷ்குமார் (39), பிரகாஷ் (31) ஆகிய 4 பேரை தெப்பக்குளம் போலீசார் கைது செய்தனர்

Leave a Reply

Your email address will not be published.