Police Department News

காலத்திற்கு ஏற்றவாறு மக்களின் அன்றாட தேவைகளுக்காக இரண்டு சக்கரவாகனத்தின் தேவையும் அதிகரித்து வருகிறது.

விருதுநகர் மாவட்டம்:-

காலத்திற்கு ஏற்றவாறு மக்களின் அன்றாட தேவைகளுக்காக இரண்டு சக்கரவாகனத்தின் தேவையும் அதிகரித்து வருகிறது.

அந்த தேவைகளை இன்றைய சமுதாய தலைமுறையினர் சர்வ சாதாரணமாக நினைத்து வாகனங்களை மின்னல் வேகத்தில் இயக்கிகொண்டும் பல துயரங்களையும் சந்தித்து வருகின்றனர்.

அருப்புக்கோட்டை நகர் போக்குவரத்து சார்பு ஆய்வாளர்களான திரு.செல்லதுரை மற்றும் திரு.முருகன் ஆகியோர் வாகன சோதனையில் இருந்தனர்.

அப்போது வாகன ஓட்டிகள் பலரும் தலைகவசம் அணியாமலும் அதில் சிலர் அதிவேகத்தில் வாகனம் செலுத்துவதையும் தடுத்து நிறுத்தியும் அபராதம் அளித்தும் தேவையான இடங்களில் அறிவுரைகளையும் வழங்கினர்.

குறிப்பாக பொதுமக்களை அச்சுறுத்தும்விதமாக வாகனத்தை ஓட்டும் ரோட்சைட் ரோமியோக்களின் வாகனங்களை இனம் கண்டு அவர்களின் வாகனத்தை முழுமையாக சோதனை செய்தனர்.

இவர்களில் அண்டை மாநிலத்தை சேர்ந்தவர்கள் பலர் தங்கியிருந்து பணியாற்றுவதால் அவர்களின் வாகனம் உட்பட சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

நம்முடைய வாழ்க்கையின் நேரம் பொன்போன்றது அந்த நேரத்தை மிச்சபடுத்துபவை வாகனம்தான் அதை சரியான வேகத்தில் பயன்படுத்துவதும் அவரவர் கையிலும், குறிப்பாக இன்றை தலைமுறையினரின் கையிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.