ஜிட்டாண்டஅள்ளி தனியார் மண்டபத்தில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கஞ்சா புழக்கமற்ற பகுதியாக 24 கிராமங்கள் அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றனர்.
தருமபுரி மாவட்டம் மகேந்திமங்கலம் அருகே ஜிட்டாண்டஅள்ளி பஞ்சாயத்திற்க்கு உட்பட்ட பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு கஞ்சா பழக்கம் இருந்து வந்தது, போலீசாரின் தீவிர முயற்சியால் கஞ்சா புழக்கம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது,
அதனை தொடர்ந்து மாவட்ட காவல் துறையினர் நாயக்கனூர் , கொல்லப்பட்டி, பன்னிகொட்டாய், சென்னம்பட்டி, கிட்டம்பட்டி உள்ளிட்ட 24 கிராமங்கள் கஞ்சா புழக்கமற்ற பகுதியாக கண்டறிந்து அப்பகுதிகளை கஞ்சா புழக்கமற்ற பகுதியாக அறிவித்தது,
அதனை தொடர்ந்து ஜிட்டாண்டஅள்ளி தனியார் மண்டபத்தில் நடைப்பெற்ற கஞ்சா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் நடைப்பெற்றது.
இதில் 24 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், வார்டு உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் வரவழைக்கப்பட்டு விழிப்புனர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் கலந்து கொண்ட அப்பகுதி மக்கள் இனி கஞ்சாவை எங்கள் பகுதியில் அனுமதிக்க மாட்டோம் என்ற உறுதி மொழி ஏற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு டி.எஸ்.பி சிந்து, காவல் ஆய்வாளர் ஜாபர் உசேன், உதவி காவல் ஆய்வாளர் ஜெயராமன், மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.