பாலக்கோடு பஸ் நிலையம் அருகே உள்ள ஏ.டி.எம்.மில் பிரபல கொள்ளையனை சுற்றி வளைத்து பிடித்த டி.எஸ்.பி.சிந்து
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள ஏ.டி.எம்.மையங்களில் எழுத படிக்க தெரியாதா, பணம் எடுக்க வரும் அப்பாவிகளை பணம் எடுத்து தருவதாக கூறி அவர்களின் ஏ.டி.எம் கார்டு மற்றும் இரகசிய குறியீடு நெம்பரை பெற்று பின் உங்கள் ஏ.டி.எம் கார்டு வேலை செய்யவில்லை வங்கியில் சென்று கேளுங்கள் என கூறி தன்னிடம் உள்ள வேறொரு ஏ.டி.எம் கார்டு கொடுத்து அனுப்பி விட்டு, உடனடியாக வேறு பகுதியில் உள்ள ஏ.டி.எம் க்கு சென்று முழு பணத்தையும் எடுத்து பலரை ஏமாற்றி மோசடி செய்து வருவதாக பாலக்கோடு டி.எஸ்.பி. சிந்து விற்க்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
ஏ.டி.எம். திருடனை பிடிக்க பாலக்கோடு இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் தனிக்குழு அமைத்து பி.எஸ்.பி சிந்து உத்தரவிட்டார்,
கொள்ளையனை போலீசார் தேடி வந்த நிலையில் இன்று காலை பாலக்கோடு ஏ.டி.எம் உள்ளே குற்றவாளி இருப்பதாக டி.எஸ்.பி.சிந்து விற்க்கு இரகசிய தகவல் கிடைத்தது,
உடனடியாக பாலக்கோடு இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் போலீசாருடன் சென்ற டி.எஸ்.பி ஏ.டி.எம் மையத்திற்குள்ளேயே திருடனை மடக்கி பிடித்தார்,
விசாரனையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசுர் அருகே உள்ள பாரதியார்நகரை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி ரவி (36) என்பதும் 10க்கும் மேற்பட்டவர்களிடம் 2 இலட்சம் ரூபாய் கொள்ளையடித்ததும் தெரியவந்தது, அவரிடமிருந்து 20 ஆயிரம் ரூபாய் பணமும், 1 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள பிரிட்ஜ், எல்.ஈ.டி டி.வி, சோபா உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து, 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பிரபல ஏ.டி.எம். திருடனை பிடித்த பி.எஸ்.பி. சிந்து விற்க்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.