Police Department News

மாரண்டஅள்ளி தனியார் மண்டபத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் உலக மகளிர் தின கருத்தரங்கம் இன்று நடைப்பெற்றது.

மாரண்டஅள்ளி தனியார் மண்டபத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் உலக மகளிர் தின கருத்தரங்கம் இன்று நடைப்பெற்றது.

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் உள்ள தனியார் மண்டபத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் அதன் இயக்குநர் சந்திரகலா தலைமையில் உலக மகளிர் தின கருத்தரங்கம் மற்றும் பேரணி நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது.
இதற்கு தர்மபுரி சுகாதார இணை இயக்குநர் டாக்டர்.சாந்தி, தர்மபுரி துணை காவல் கண்காணிப்பாளர் ரவிகுமார், இந்தியன் வங்கி மேலாளர் பத்மாவதி ஸ்ரீகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக மாரண்டஅள்ளி பேரூராட்சியில் இருந்து திருமண மண்டபம் வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை பெண்கள் ஊர்வலமாக சென்றனர்.
இதில் பேசிய சுகாதார இணை இயக்குநர் சாந்தி அவர்கள் பெண்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும்,
பெண் கல்வியே குடும்பத்தை உயர்த்தும், குழந்தை திருமணத்தையும், பெண் சிசு கொலையும் அறவே தவிர்க்கப்பட வேண்டும் என பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.