பாலக்கோடு காட்டம்பட்டி கிராமசபை கூட்டத்தில் பெண் தலைவியை தகாத வார்தைகளால் பேசியதால் தட்டி கேட்ட கணவர் படுகாயம்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் காட்டம்பட்டி ஊராட்சியில் நேற்று உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராமசபைக் கூட்டம் நடைப்பெற்றது.
இக் கூட்டத்தில் பாமக வினர் சாலை , வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை என தொடர்ந்து கிராமசபை கூட்டத்தில் கேள்வி எழுப்பி வந்தனர்.
நேற்று பெண் தலைவி சங்கோதியை 40 காட்டம்பட்டியை சேர்ந்த பாமக வை சேர்ந்த நிர்வாகி பச்சியப்பனுடன் 43 குத்தலஅள்ளி அன்பரசு 31 செல்வம் 33 வெங்கடாசலம் 27 ஆகியோர் இணைந்து தகாத வார்த்தைகளால் ஆபாசமாக பேசியதால் பெண் தலைவியின் கணவர் சத்தியபிரபு 45 தட்டிக் கேட்டுள்ளார், இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாகியது, எதிர் தப்பினர்
சத்தியபிரபுவை மூர்க்கமாக தாக்கியதில் படுகாயமடைந்து பாலக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து புகாரின் பேரில் பாலக்கோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.