கோடை வெயில் அதிகரிப்பு,பாம்புகள் படையெடுப்பு தப்ப வழி கூறும் தீயனைப்பு நிலைய அலுவலர்
திண்டுக்கல் மாவட்டத்தில் வெயில் அதிகரித்து வருவதால் பாம்புகள் படையெடுத்துள்ளன. கோடை காலத்த்தில் பாம்புகளின் தொல்லையிலிருந்து தப்பிக்க திண்டுக்கல் தியணைப்பு அலுவலர் மயில்ராஜ் அவர்கள் பொதுமக்களுக்கு சில வழிமுறைகளை தெரிவித்துள்ளார்.
பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது போல் பொதுமக்களும் அதனை கண்டு பயந்து ஓடுவது இயல்பு.இந்த சம்பவம் கோடைகாலத்தில் அதிகம் நடக்க வாய்ப்புள்ளது
எனவே கோடை காலத்தில் பாம்புகளின் தொல்லையிலிருந்து தப்பிக்க திண்டுக்கல் தீயணைப்பு நிலைய அலுவலர் திரு. மயில்ராஜ் அவர்கள் பொதுமக்களுக்கு சில வழிமுறைகளை கூறியுள்ளார்.
வீட்டின் அருகே விறகு கட்டைகளை அடுக்கி வைக்க வேண்டாம் இவற்றில் பாம்புகள் புகுந்து, திறந்திருக்கும் ஜன்னல் வழிமாக வீட்டுக்குள் புகுந்து விட வாய்புள்ளது
வீட்டு ஜன்னலுக்கு அருகில் சைக்கிள்
மோட்டார் சைக்கிள் ஏணி அல்லது குச்சிகளை வைக்க வேண்டாம் தேங்காய் மட்டைகள் செங்கற்கள் ஓடுகள் கற்களை வீட்டினன் வளாகத்த்தில் குவித்து வைக்க வேண்டாம்
காலணிகளை திறந்த வெளியில் விட்டு செல்ல வேண்டாம் அதற்குள் பாம்புகள் புகுந்து மறைந்திருக்க வாய்புள்ளது
கதவை திறந்து வைத்திருக்க வேண்டாம் அதன் வழியாக பாம்புகள் வீட்டிற்குள் புகுந்து விட வாய்புள்ளது.
வீட்டிற்கு அருகில் செடி கொடிகளை வளர்ப்பதை தவிற்கவும்
வீட்டை சுற்றி குழிகளோ பள்ளமோ இருந்தால் அதனை உடனே மூடவும்
வீட்டை சுற்றி வாரம் ஒருமுறை பிளீச்சிங்க் பவுடர் அல்லது கெமிக்கல் பொருட்களை தெளித்தால் அதன் வாடைக்கு பாம்புகள் வராது
வீடுகளின் அருகில் கழிவு நீர் தேங்கவிடக்கூடாது அவ்வாறு தண்ணீர் தேங்கியிருந்தால்
தாகம் தீர்க்க பாம்புகள்
அங்கே வர வாய்ப்புகள் உள்ளது.
கழிவுகளை வீட்டிற்கு வெளியே கொட்டக்கூடாது அவ்வாறு கொட்டினால் அங்கு எலிகள் வரலாம் எலியை பிடிக்க பாம்புகள் வரும்
வீட்டிற்குள் போர்வை தலையானைகளை பாதுகாப்பான இடத்தில் வைக்கவும் ஏனெனில் வீட்டிற்குள் வரும் பாம்புகள் போர்வை தலையானைகளில் பதுங்கிட வாய்ப்புள்ளது.
மேலும் கோடை காலத்தில் போர்வை தலையானையை காய வைத்து விட வேண்டும்
கழிவறை குழாய்களில் ஓட்டை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் மேலும் வீட்டிற்குள் உள்ள கழிவறை குழாயில் ஜல்லடை மூடி போட வேண்டும்
இந்த வழிமுறைகளை கடைபிடித்தால் கோடை காலத்தில் பாம்புகள் தொல்லையிலிருந்து தப்பலாம் என்றார்.