மின்னல் வேகத்தில் வந்த வாகனம் மோதி போக்குவரத்து சிக்னல் கம்பம் சேதம்!
திண்டுக்கல் – பழனி ரோடு பைபாஸ் சாலையில் நேற்று இரவு கேரள பதிவெண் கொண்ட வாகனம் மின்னல் வேகத்தில் வந்து கொண்டு இருந்தது. அப்போது அங்கிருந்த சிக்னல் கம்பம் மற்றும் அறிவிப்பு பலகை மீது திடீரென மோதி நின்றது. இது குறித்து தகவல் கிடைத்ததும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சேதமடைந்த மின் கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
போலீசார் வருவதை அறிந்ததும் விபத்தை ஏற்படுத்திய வாகனம் அங்கிருந்து சென்று விட்டது.
இரவு நேரம் என்பதால் யார் மீதும் கம்பம் விழாமல் தவிர்க்கப்பட்டது. நெடுஞ்சாலைகளில் இரவு நேரங்களில் வரும் வெளியூர் வாகனங்கள் அசுர வேகத்தில் செல்வதால் இது போன்ற விபத்துகள் அடிக்கடி நடந்து வரு கின்றன. கனரக வாகனங்கள் மட்டுமின்றி மோட்டார் சைக்கிள்கள், கார் போன்றவையும் மின்னல் வேகத்தில் சென்று பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.
எனவே இது போன்ற நபர்களை கண்டறிந்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.