Police Department News

திருச்சி பஞ்சப்பூரில் புதிய காவல் நிலையம் அமைச்சர் கே.என் நேரு நேரில் ஆய்வு

திருச்சி பஞ்சப்பூரில் புதிய காவல் நிலையம் அமைச்சர் கே.என் நேரு நேரில் ஆய்வு

திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு அருகில் காவல் நிலையம் அமைக்கப்படுவதற்கான இடத்தை அமைச்சர் கே.என் நேரு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன மேலும் இதன் அருகில் சரக்கு வாகனங்களுக்கான முனையும் ஒருங்கிணைந்த காய்கறி பழங்கள் விற்பனை வளாகம் மாநகராட்சி விளையாட்டு மைதானம் பல்நோக்கு வளாகம் போன்றவை அமைக்கப்பட உள்ளன.

மேலும் திருச்சி கரூர் வழிதடத்தை இணைப்பதற்கான ரூபாய் 320 கோடி செலவில் ஆற்றுக்கரைகளின் வழியாக கரூர் பைபாஸ் சாலையை இணைக்கும் வகையில் குடமுரட்டி வரை புதிதாக சாலைஅமைக்கப்பட்ட உள்ளது அத்துடன் இதே பகுதியில் சுமார் 200 ஏக்கரில் ஒலிம்பிக் நகரம் ரூபாய் 600 கோடி மதிப்பீட்டில் டைடல் பார்க் ஆகியவையும் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர திருச்சி மெட்ரோ ரயில் திட்டத்தின் வழித்தடத்திலும் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் பஞ்சப்பூர் இனி சிங்கப்பூர் என சமூக வலைதளங்களில் திருச்சி மக்கள் பெருமையுடன் கூறி வருகின்றனர்.

பேருந்து நிலையம் மெட்ரோ ரயில் நிலையம் ஒலிம்பிக் நகரம் டைடல் பார்க் மார்க்கெட் என பல்வேறு திட்டங்கள் பகுதியில் அமையுள்ள நிலையில் இவை செயல்பாட்டிற்கு வந்த பிறகு நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பகுதிக்கு வந்து செல்லும் நிலை ஏற்படும் எனவே அதற்கு ஏற்ற பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக பஞ்சப்பூர் பகுதிக்க என தனி காவல் நிலையத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது இதற்காக பஞ்சப்பூர்பேருந்து நிலையம் அருகில் காவல் நிலையம் அமைக்க 1 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது அந்த இடத்தை அமைச்சர் கே.என்.நேரு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன், மாநகர காவல் ஆணையர் சத்தியபிரியா,டிஐஜி சரவண சுந்தர்,எஸ் பி சுஜித்குமார் ஆகியோருடன் அமைச்சர் நேரில் ஆலோசனை நடத்தினார்.

அப்போது மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார், மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்தியநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர் பஞ்சப்பூரில் புதிதாக காவல் நிலையம் அமைப்பது குறித்து அறிவிப்பு விரைவில் முறைப்படி அரசால் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.