Police Department News

செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்

செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்

திருமங்கலம் முகமதுஷா புரம் தேவர் தெருவை சேர்ந்தவர் மதன பிரகாஷ் (வயது 36), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதைத் தொடர்ந்து அவர் தன்னுடைய தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியைச் சேர்ந்த சிலர் முன்விரோதம் காரணமாக மதன பிரகாஷை தாக்கியதாகவும், அவருடைய இருசக்கர வாகனத்தை எரித்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து திருமங்கலம் நகர் போலீஸ் நிலையத்தில் மதன பிரகாஷ் புகார் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், இன்று திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள உயர் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி நின்று கொண்டு தற்கொலை செய்துகொள்ள போவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் அந்தப் பகுதியில் பொதுமக்கள் கூடினர். தகவல் அறிந்த திருமங்கலம் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சுமார் 2 மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தியும், மதனபிரகாஷ் அவர்களுக்கு உடன்படாமல் கீழே இறங்கிவர மறுத்தார். இதைத் தொடர்ந்து அங்கு வந்த நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்மகை எடுக்கச் செய்வதாக உறுதியளித்ததை அடுத்து அந்த வாலிபர் செல்போன் கோபுரத்தில் இருந்து இறங்கிவந்தார்.

உடனடியாக திருமங்கலம் டவுன் போலீசார் அவரை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். மேலும் அவர் செல்போன் கோபுரம் மீது ஏறி மிரட்டல் விடுத்தது தொடர்பாக அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.