
தமிழகத்தில் செல்போன் நம்பர்கள் முடக்கம்.. எதுக்கு தெரியுமா??
தமிழகத்தில் செல்போன் நம்பர்கள் முடக்கம்.. எதுக்கு தெரியுமா?? பொதுமக்களே உஷார்..!
தமிழ்நாட்டில் மோசடிகளில் ஈடுபடும் செல்போன் நம்பர்களை முடக்க சைபர் கிரைம் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தற்போது செல்போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், நேரடி பணப் பரிமாற்றம் குறைந்து தற்போது மொபைல் வழியாகவே அதனை மேற்கொள்கின்றனர். அதனால் மோசடிகளும் அதிகமாக நடக்கிறது. எளிதாக போன் நம்பரை வைத்தே தகவல்களை திருடுவது மற்றும் பணத்தினை கொள்ளை அடிப்பது போன்ற குற்ற செயல்களில் அதிகமாக நடக்கிறது.
OTP வழியாக, வங்கி கணக்கில் பான் கார்டு, ஆதார் கார்டு விவரங்களை திருடி வங்கி கணக்கில் பணத்தை திருடுகின்றனர். இது மட்டுமில்லாமல் மோசடியான போன் கால் மூலமாகவும் ஆன்லைன் மோசடிகள் நடைபெறுகிறது. அதனளித்து போன்ற மோசடிகளில் ஈடுபடும் செல்போன் எண்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது.
அதன்படி, இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மைய பிரத்யேக செயலியை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் சைபர் கிரைம் மோசடியில் ஈடுபடுத்தப்படும் செல்போன் எண்களை சைபர் கிரைம் போலீசார் பதிவேற்றம் செய்யலாம். அதனை ஆய்வு செய்து நிரூபிக்கப்பட்டால் அந்த என் முடக்கப்படும்.
