Police Department News

சென்னை கீழ்பாக்கம் மற்றும் புளியந்தோப்பு பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் ஆய்வு செய்து மழைநீர் அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர். திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் 01.12.2019 அன்று காலை, சென்னையில் கீழ்பாக்கம் கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை மற்றும் புளியந்தோப்பு ஜீவா இரயில் நிலைய இரயில்வே சுரங்கப்பாதை பகுதிக்கு சென்று ஆய்வு செய்து, காவல் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டு மழைநீரால் வெள்ளம் சூழ்ந்த இடங்களில் உள்ள மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்தி வாகனங்கள் சீராக செல்ல அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் அப்பகுதிகளிலுள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து அவற்றை உடனுக்குடன் சரி செய்து நிவாரணப் பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும், சென்னையில் சாலையில் விழுந்த மரங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தவும், மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் மீட்பு பணிகளில் ஈடுபடவும், அனைத்து இடங்களில் காவல் ஆளிநர்கள் மற்றும் அதி தீவிர படையினர் தயாராக உள்ளதாக காவல் ஆணையாளர் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்வின்போது, சென்னை பெருநகர காவல் தெற்கு கூடுதல் ஆணையாளர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா,இ.கா.ப, கிழக்கு மண்டல இணை ஆணையாளர் திரு.ஆர்.சுதாகர்,இ.கா.ப., மேற்கு மண்டல இணை ஆணையாளர் திருமதி.பி.விஜயகுமாரி,இ.கா.ப., மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.

ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்.

Leave a Reply

Your email address will not be published.