Police Department News

ஒருமாதங்களில் 10 சவரன் நகை ஐந்து செல்போன் சொகுசு வாழ்க்கை!’ – காஞ்சியை அதிரவைத்த திருடன்

காஞ்சிபுரம் ஐயப்பாநகர்,அதியமான்நகர்,காந்திநகர்,திருபருத்திகுன்றம் சாலை,பல்லவநகர், உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ளவீடுகளில் இரவு நேரங்களில் நகை மற்றும் செல்போன் அடிக்கடி திருடு போவது வாடிக்கையாக இருந்தது. தொடர்ந்து திருட்டு நடப்பதால் அதற்கான வழக்குகள் கூடிக்கொண்டேபோக போலீஸார் வழக்கு விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
இதுதொடர்பாக விசாரிக்க காஞ்சிசரக டி.ஜ.ஜி, திருமதி.தேன்மொழி அவர்களின் ஆலோசனையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.பா சாமுண்டீஸ்வரி அவர்களின் உத்தரவில் ஏ.டி.எஸ்.பி பாலசந்தர் அவர்களின் மேற்பார்வையில் டி.எஸ்.பி. கலைச்செல்வன் காஞ்சிதாலுக்கா காவல்ஆய்வாளர் பாஸ்கர் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. கடந்த சில தினங்களாகத் தனிப்படை போலீஸார் காஞ்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தார்கள். வாகனத் தணிக்கையிலும் தொடர்ந்து ஈடுபட்டுவந்தனர்.
அந்த வகையில் அந்த வழியாக வந்த ஒருவரைப்பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார் அந்த நபரிடம் தொடர்ந்து போலிஸார் விசாரனை நடத்தனர் அப்போது அவர் தாயார்குளம் எம்.ஜி.ஆர் நகரைச்சேர்ந்த வேலுவின் மகன் வெங்கடேசன் என்பது தெரியவந்தது
தொடர்ந்து விசாரணை நடத்திய தனிப்படை போலீஸாரிடம் ஐயப்பாநகர்,அதியமான்நகர்,காந்திநகர்,திருப்பருத்திகுன்றம்சாலை,பல்லவன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் நடந்தே சென்று ஜன்னல் திறந்திருக்கும் வீடுகளை குறிவைத்து செல்போன் மற்றும்நகையை திருடி வந்ததாகவும், அந்த திருடிய செல்போன்களை செவிலிமேட்டில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளில் குடிக்கவரும் நபர்களிடம் இது தன்னுடைய போன் குடிக்க பணம் இல்லை பொய் செல்லி குறைந்த விலையில் விற்று வந்தேன். அதில் கிடைக்கும் பணத்தை சந்தோசமாக வாழ்ந்தேன்” என்று அவர் தெரிவித்ததாகப் தனிப்படை போலீஸார் தெரிவித்தனர்.
கடந்த ஒரு மாதங்களில் பத்துசவரன் தங்கநகை விலைமதிப்புள்ள செல்போன்களை திருடினேன்” என்றாராம். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார் வெங்கடேசன் மீதான வழக்குகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். அதில், சென்னை கோயம்பேடு மற்றும் ஜே.ஜே.நகர் காவல்நிலைங்களில் திருடிய வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது
மேலும் சாதராண மனிதனாக தெரிவில் நடைபயணமாக சென்று கடந்த மாதங்களில் வெங்கடேசன் திருடிய
பத்துசவரன் தங்கநகைகள் மற்றும் விலைமதிப்பு ஐந்து செல்போன்களையும் பறிமுதல் செய்யப்பட்டு
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்தியசிறையில் அடைத்தனர் மேலும் தனிப்படை போலிசார் குற்றவாளியை பிடிப்பதில் இரவும் பகலும் பாராமல் பொதுமக்களுக்கு சேவகன் என்ற நம்பிக்கையின் காவலனாக அப்பகுதி மக்களால் நன் மதிப்பையும்
பெற்றனர் மேலும் தனிப்படை காவலர்களான S.I.தர்மலிங்கம்
S.I.டீக்காராம்
தலைமைகாவலர்
சக்கரவர்த்தி
குமரன், குமரவேல்ராஜன், ரகுநாதன்,ரமேஷ், ஆகியோரை உயர்அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்

போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக
காஞ்சிபுரம் மாவட்ட நிருபர் ம.சசி

Leave a Reply

Your email address will not be published.