ஏ.டி.எம். கொள்ளையர்களை கைது செய்த வேலூர் சரக தனிப்படையினருக்கு டிஜிபி அவர்கள் ஒரு லட்சம் ரொக்கபரிசு அளித்து கவுரவித்தார்.
இதை பற்றிய விபரம் பின் வருமாறு,
தமிழகத்தையே உலுக்கிய திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்ய வேலூர் சரக காவல் துணைத் தலைவர் திரு.எம்.எஸ்.முத்துசாமி, இ.கா.ப. அவர்கள் தனிப்படை ஒன்றை அமைத்தார்.
அவர்கள் வடமாநிலங்களுக்கு நேரில் சென்று துப்பாக்கி முனையில் இந்த கொள்ளை தொடர்பான முக்கிய குற்றவாளிகளை கைது செய்தனர்.
அதில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வந்து அவ்வப்பொழுது கைவரிசைக்காட்டிய வடமாநில கொள்ளையர்கள் பிடிபட்டனர்.
மிகப்பெரிய சவாலான இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட வேலூர் சரக தனிப்படை குழுவிற்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு மற்றும் சான்று வழங்கப்படும் என்று தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் திரு. சி.சைலேந்திர பாபு, இ.கா.ப. அவர்கள் அறிவித்தார்கள்.
இந்நிலையில், அரியானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், ஹிமாச்சலம் பிரதேசம், அசாம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 8 குற்றவாளிகளையும் கைது செய்த வேலூர் ரேஞ்ச் ஒருங்கிணைந்த குழுவிற்கு ஒரு லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை காவல்துறைத் தலைவர் டி.ஜி.பி. டாக்டர் திரு. சி.சைலேந்திர பாபு வழங்கி கவுரவித்தார்.