தருமபுரி மாவட்டத்தில் கள்ளசாராயம் கடத்திய கூலி தொழிலாளி கைது
தருமபுரி மாவட்டம், அரூர் பகுதியில் மது விலக்கு குற்ற தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அரூர்- சித்தரேி செல்லும் சாலையில் சந்தேகமளிக்கும் படியாக இருசக்கர வாகனத்தில் வந்த தேக்கல் பட்டி கிராமத்தை சேர்ந்த ஜடையன் மகன் பழனி (48) என்பவரை சோதனை செய்த போது 14 பாக்கெட்டுகளில் கள்ள சாராயத்தை கடத்தி செல்வது தெரியவந்தது.
இதனையடுத்து கள்ள சாராயம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் பழனியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்