Police Recruitment

மதுரையில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரையில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி மதுரை மாநகர காவல் துறையினருக்காக மதுரை சி.எஸ்.ஐ. பல் மருத்துவமனை சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் விழிப் பணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் சி.எஸ்.ஐ. பல் மருத்துவமனை கல்லூரி டீன் சரவணன், முதல்வர் தனவீர் மற்றும் தலைமை மருத்துவர் வின்னி ப்ரெட் ஆகியோர் பங்கேற்று காவல்துறையினருக்கு புகையிலை தொடர்பான கெடுதல்கள், உடல் உபாதைகள் மற்றும் சிரமங்கள் ஆகியவற்றை எடுத்துரைத்தனர். அதன்பின்பு காவல்துறையினருக்கு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், காவல் துறையினர் தங்களது உடலை எவ்வாறு பேண வேண்டும் என்பது பற்றியும் புகையிலையால் ஒவ்வொரு நபரும் பாதிக்கப்படுவதோடு சமூகம் எவ்வாறு பாதிக்கப் படுகிறது? என்பதையும் எடுத்துரைத்தார்.

காவல் துணை ஆணையர் தலைமையிடம் மங்க ளேஸ்வரன், போக்கு வரத்து திட்ட கூடுதல் காவல் துணை ஆணையர் திருமலைக்குமார் ஆகி யோர் ஏற்பாடு செய்தனர். நிகழ்ச்சி யில் 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பங்கேற்று பயன்பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published.