Police Department News

ராயபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கத்தியுடன் சுற்றிய மூன்று குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்கள் மற்றும் ஊர்க்காவல் படைவீரர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார் .

ராயபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கத்தியுடன் சுற்றிய மூன்று குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்கள் மற்றும் ஊர்க்காவல் படைவீரர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார் .

கடந்த 24.11.2019 அன்று இரவு சுமார் 9.30 மணியளவில் N-1 இராயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிரேஸ் கார்டன் பகுதியில் 3 நபர்கள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சாலையில் கத்தியுடன் சுற்றி திரிவதாக கிடைத்த தகவலின் பேரில் ராயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர்.

மேலும் சம்பவ இடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை செய்தபோது சம்மந்தப்பட்ட நபர்களான 1.விஜயன், வ/33, த/பெ.தனவேல், புதுவண்ணாரப்பேட்டை 2.சூர்யா, வ/21, த/பெ.கோ பால், புதுவண்ணாரப்பேட்டை 3.மனோ, வ/26, த/பெ. நரசிம்மன், சுனாமி குடியிருப்பு, எர்ணாவூர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 1 கத்தி மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மூன்று நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்த N-1 ராயபும் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.G.செல்வகுமார் தலைமைக்காவலர்கள் திரு.A.சரவணன் (தா.கா.27354), திரு.S.சதீஷ்குமார், முதல் நிலைக்காவலர்கள் திரு.A.செந்தில்குமார் (மு.நி.கா.29256), திரு.S.கார்த்திக்கேயன் (மு.நி.கா.31734), ஊர்க்காவல்படை வீரர்கள் திரு.எஸ்.காசி (எண்.3256) திரு.M.கார்த்திக் (எண்.4224) திரு.எம்.அருண்பாலாஜி (எண்.4238) ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் இன்று (10.12.2019) நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published.