Police Recruitment

அரசு பஸ் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

அரசு பஸ் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கலிங்கபட்டிக்கு செல்லும் அரசு பஸ் வன்னியம்பட்டி, பெருமாள் தேவன்பட்டி, அட்டைமில், கீழராஜகுலராமன், வடகரை, கொருக்காம்பட்டி வழியாக தினசரி மகளிர் கட்டணமில்லா பஸ்சாக இயக்கப்படுகிறது. இந்த பஸ் ஸ்ரீவில்லி புத்தூர், ராஜபாளையம், வெம்பக்கோட்டை, சங்கரன்கோவில் ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள கிராமப்பகுதி மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்- கலிங்கபட்டி பஸ் சரியாக இயக்கப்படாதது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்குவரத்து கழகத்தில் சிலர் புகார் அளித்தனர்.

இந்நிலையில் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கலிங்கபட்டிக்கு காலை 10.30 மணிக்கு அந்த பஸ் புறப்பட்டது. பஸ்சில் கொருக்கும்பட்டியில் கல்லூரி மாணவி ஒருவர் ஏறி உள்ளார்.

அப்போது அவரிடம் நடத்துநர் தங்கவேலு, பஸ் சரியாக வர வில்லை என உங்கள் ஊரில் இருந்து புகார் அளித்துள்ள தாக கூறி மாணவியை அவதூறாக பேசி உள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர், ரகுராமன் எம்.எல்.ஏ.விடம் தெரிவித்தனர்.

இதையடுத்து ஸ்ரீவில்லி புத்தூர் போக்குவரத்து கழகத்திற்கு வந்த ரகுராமன் எம்.எல்.ஏ. சம்பந்தப்பட்ட கண்டக்டர், மாணவியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், மேலும் அவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 15 நாட்களில் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து பணிமனை மேலாளர் உறுதி அளித்திருப்பதாக கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published.