Police Department News

அறுபது ரூபாய் விலை குறைவு!’ – மதுரை மத்திய சிறைக் கைதிகள் தயாரிக்கும் பூந்தொட்டிகள்இந்த ஆண்டில் நூறு சதவிகிதம் கல்வி என்ற வகையில் கைதிகளுக்குக் கல்வி அளிக்க திட்டமிட்டுள்ளோம். தொழிற்கல்வி கைதிகளுக்குக் கற்பிக்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

அறுபது ரூபாய் விலை குறைவு!’ – மதுரை மத்திய சிறைக் கைதிகள் தயாரிக்கும் பூந்தொட்டிகள்இந்த ஆண்டில் நூறு சதவிகிதம் கல்வி என்ற வகையில் கைதிகளுக்குக் கல்வி அளிக்க திட்டமிட்டுள்ளோம். தொழிற்கல்வி கைதிகளுக்குக் கற்பிக்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
மதுரை மத்திய சிறைச்சாலையில் தண்டனை கைதிகள் 750 பேர் உட்பட 1,000 ஆண் கைதிகளும் 100 பெண் கைதிகளும் உள்ளார்கள். கைதிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு வேலைகள் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன. கைதிகளைக்கொண்டு சிறைச்சந்தை எனச் சிறப்பாகச் சந்தையை மதுரை மத்திய சிறைத் துறை நிர்வாகம் நடத்தி வருகிறது. சிறைச் சந்தை மூலமாக பிரட் பாக்கெட்டுகள், ரொட்டி, இனிப்பு வகைகள் போன்ற உணவுப்பொருள்கள் தயார் செய்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றன. இது மட்டுமல்லாமல் தற்போது புதிய முயற்சி ஒன்றைக் கைதிகளின் உதவியோடு சிறைத்துறை கையில் எடுத்துள்ளது.மத்திய சிறைச்சாலையில் கடந்த சில ஆண்டுகளாக நர்சரி நடத்தி வருகிறார்கள். இப்போது கைதிகளின் மூலம் பூந்தொட்டி செய்து அதனை விற்பனை செய்ய உள்ளது சிறைத்துறை. கடைகளில் ரூ.130- க்கு விற்கப்படும் பெரிய அளவிலான பூந்தொட்டி, மத்திய சிறைச்சாலையில் உள்ள நர்சரியில் ரூ.70 – க்கும் சிறிய பூந்தொட்டி ரூ.40 -க்கும் விற்க உள்ளார்கள். இதை டிஐஜி பழனி மற்றும் சிறைக் கண்காணிப்பாளர் ஊர்மிளா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதுகுறித்து டி.ஐ.ஜி பழனி கூறுகையில், “கைதிகளுக்கு வேலை கொடுக்காமல் இருந்தால் அவர்களுக்கு ஏதேனும் யோசிக்கத் தோன்றும். அந்த யோசனை செய்த தவறை உணர்ந்து திருந்துவது குறித்தும் இருக்கலாம். புதிதாக தவறு செய்ய தூண்டுவதாகவும் இருக்கலாம். அதைத் தடுப்பதற்கு உருவானதே சிறைச் சந்தை, தோட்டவேலை, கைவினைப் பொருள்கள் செய்வது முதலியன. மதுரை மத்திய சிறையைப் பொறுத்தவரையில் கைதிகளுக்குப் பல வேலைவாய்ப்பு உள்ளது. பெண்களுக்கென கைவினை ஆபரணங்கள் செய்வது மற்றும் தையல் முதலியன கற்பிக்கப்பட்டு வேலை செய்ய வைக்கிறோம்.
சிறைச் சந்தையில் உணவுப் பொருள்களைத் தயாரிக்கும் வேலையையும் பெண் கைதிகள் பார்க்கிறார்கள். சிறைச் சந்தை மூலமாக மாதத்திற்கு இரண்டு முதல் இரண்டரை லட்ச ரூபாய் வருமானம் வருகிறது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மாதத்திற்கு ஒரு லட்ச ரூபாய் வரை வருமானம் அதிகமாக உள்ளது. மத்திய சிறையின் கட்டுப்பாட்டில் உணவகம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. பெட்ரோல் பங்க் வர உள்ள நிலையில், வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. கைதிகளுக்கு வருவாய்க்கு ஏற்ற வகையிலும் அவர்களின் வேலைக்கு ஏற்ற வகையிலும் சம்பளம் அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை நர்சரி மூலமாக செடிகள் குறைந்த விலையில் வாங்கி பொதுமக்கள் பயன் பெற்றார்கள். இதுமட்டுமல்லாமல் இங்குள்ள செடிகளுக்கு இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர். இப்போது கூடுதலாகத் தொட்டியையும் கைதிகள் செய்து விற்க உள்ளார்கள்.தொட்டி செய்யத் தொடங்கியதன் நோக்கம் பொதுமக்களும் குறைந்த விலையில் வாங்கிப் பயன்பெற வேண்டும் கைதிகளுக்கும் இதன்மூலம் வருமானம், மன நிம்மதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான். இந்தத் தொட்டிகளைச் செய்வதற்காகக் கைதிகளுக்கு ஆட்களைக்கொண்டு பயிற்சி அளித்தோம். பின்னர் அவர்களே தொட்டிகளைச் செய்துள்ளார்கள்.
மேலும், இந்த ஆண்டில் நூறு சதவிகிதம் கல்வி என்ற வகையில் கைதிகளுக்குக் கல்வி அளிக்கத் திட்டமிட்டுள்ளோம். தொழிற்கல்வி கைதிகளுக்குக் கற்பிக்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. தொழிற்கல்வி மூலம் கணினி, தையல் போன்றவை கைதிகளுக்குக் கற்பிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ வசதியைப் பொறுத்தவரையில் புதிதாக ஒரு மருத்துவரை நியமித்துள்ள நிலையில் மூன்று மருத்துவர்கள் உள்ளனர். இதனால் கைதிகளுக்குச் சிறு உபாதை என்றாலும் உடனடியாக முதலுதவி அளிக்கப்படுகிறது.
மத்தியச் சிறைச்சாலையில் உள்ள தோட்டத்தின் மூலமாக வாரத்திற்கு ரூ.25,000 வருவாய் வருகிறது. புதிதாகத் தொடங்கியுள்ள இந்தத் தொட்டி விற்பனையின் மூலம் இன்னும் அதிகமாக வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்களின் தேவையைப் பொறுத்து கைதிகள் தொட்டியைச் செய்ய உள்ளார்கள்” என்றார்.இதுவரை செடிகளையும் இயற்கை உரங்களையும் மட்டும் விற்பனை செய்து வந்த மதுரை மத்தியச் சிறைச்சாலையில் உள்ள நர்சரியில் தொட்டியும் குறைந்த விலையில் விற்பனை செய்ய உள்ளதால்
இயற்கைப் பிரியர்களுக்கு மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.

போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்

Leave a Reply

Your email address will not be published.