Police Department News

விளையாட்டு போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்ற தலைமை காவலர்க்கு மதுரை காவல் ஆணையர் பாராட்டு

விளையாட்டு போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்ற தலைமை காவலர்க்கு மதுரை காவல் ஆணையர் பாராட்டு

விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற தலைமை காவலரை பாராட்டிய மதுரை மாநகர காவல் ஆணையர்..

மதுரை மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் த.கா.926,சந்துரு என்பவர் அமெரிக்காவின் அலபாமா நகரில் நடைபெற்ற World Police and Fire Games அமைப்பால் நடத்தப்பட்ட 21 St Bionnial Games போட்டிகளில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கப் பதக்கமும் 100 மீட்டர் ஓட்டப் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் பெற்றுள்ளார். முன்னதாக மேற்கண்ட போட்டிகள் கலந்து கொள்ள தமிழ் நாடு காவல்துறையிலிருந்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் அவர்கள் தலைமையில் 15 பேர் கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்று சுமார் 39 பதக்கங்களை பெற்றுள்ளனர்.

மேற்படி தடகள போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் பெற்ற தலைமை காவலர் சந்துருவை மதுரை மாநகர காவல் ஆணையர் J.லோகநாதன் ஐபிஎஸ் அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்கள்.

Leave a Reply

Your email address will not be published.