வரதட்சணை கொடுமையால்இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை
தருமபுரி மாவட்டம் தொப்பூர் ஜருகு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது40). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி தனது மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அரூர் அருகே உள்ள மருக்காலம்பட்டி பகுதியை சேர்ந்த பிரியங்கா (25) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து சுந்தரமூர்த்தி, தனது மனைவியிடம் தந்தையிடம் வரதட்சணையாக பணம் கேட்டு வாங்கி வருமாறு தொந்தரவு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால் மனவேதனை காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று பிரியங்கா வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு கொண்டார் என்று சுந்தரமூர்த்தி தனது மாமனாருக்கு சீனுக்கு தகவல் தெரிவித்தார்.
அப்போது அவர் சம்பவ இடத்திற்கு வந்து பிணமாக கிடந்த தனது மகளின் உடலை பார்த்து கதறி அழுதார்.
இதுகுறித்த சீனு தொப்பூர் போலீஸ் நிலையத்தில் தனது மகளின் உடலில் காயங்கள் இருப்பதால், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரியங்காவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து பிரியங்கா அடித்து கொலை செய்து விட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டரா? அல்லது வரதட்சணை கொடுமை தாங்காமல் அவர் தூக்குபோட்டு கொண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.